வலங்கைமான் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழாவை முன்னிட்டு100 இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கொட்டையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு துவக்க விழா, தகைசால் தமிழர்,தியாக சீலர், சுதந்திரப் போராட்ட வீரர் ஆர். நல்லகண்ணு அவர்களின் நூறாவது பிறந்த நாள் விழா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தொழிற் சங்க தலைவர் கே.டி.கே. தங்கமணி அவர்களின் 23-ஆம் ஆண்டு நினைவு நாள் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் தலைமை வகித்தார்.
விவசாய தொழிற் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் கு.ராஜா விவசாய தொழிற் சங்க வலங்கைமான் ஒன்றிய செயலாளர்கொட்டையூர் கே. நாகராஜனின் கல்வெட்டில் செங்கொடியினை ஏற்றி வைத்து, ஜனசக்தி சிறப்பு மலரையும் விற்பனையை தொடங்கி சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து அரையூர், மாணிக்கமங்கலம், பைத்தஞ்சேரி, கிளியூர், நார்த்தங்குடி, நரிக்குடி, கருப்பட்டி பள்ளம் உள்ளிட்ட ஒன்றியம் முழுவதும் கிளைகளில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் எம். கலியபெருமாள், ஒன்றிய செயலாளர் சின்ன ராசா, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜி. ரவி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தேவிகா, இளைஞர் பெருமன்றம் ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், கண்ணையன் உள்ளிட்ட நிர்வாகிகள் குழுவாக சென்று நூற்றாண்டு விழாவில் 100 இடங்களில் கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார்கள்.