துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம்(டிசம்பர் 28) அனுசரிக்கப்பட்டது.தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு துறையூர் மேற்கு ஒன்றிய தேமுதிக மற்றும் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் ரசிகர்கள் இணைந்து கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் மேற்கு ஒன்றிய செயலாளர் சென்னை பிரியாணி சரவணன் ஆலோசனை பேரில் கேப்டன் விஜயகாந்த் ரசிகர்கள் ஏற்பாட்டில் பிரம்மாண்டமான அன்னதானம் நடைபெற்றது. இதில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
இதில் மிச்சர் சுரேஷ், பிரபாகரன், சுரேஷ்குமார்,சிவசக்தி, ராஜா,முன்னாள் வர்த்தக அணி செயலாளர் அம்மாபட்டி குமார், ராஜு, மணி, சுரேஷ் , சிங்களாந்தபுரம் சதீஷ், கொத்தம்பட்டி குமார், பழக்கடை சீனிவாசன், விஜயகாந்தின் உதவியாளர் சிவக்குமார் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கேப்டன் விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்