தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, ஜி.கே.வாசன் 60-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்மாநில செயற்குழு உறுப்பினர் என் ஆர். நடராஜன் தலைமையில் கீழவாசல் காமராஜர் சிலை அருகில் சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்
பி எல் ஏ. சிதம்பரம், மாநில இணைசெயலாளர்கள் ராம்மோகன், கார்த்திகேயன், டெல்டா மண்டல இளைஞரணி தலைவர் திருச்செந்தில், மண்டல சிறுபான்மை அணி தலைவர் ஸ்டீபன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்
சர்வமத பிரார்த்தனை, கீழவாசல் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து கீழவாசல் மற்றும் சி ஆர் சி தொழிற்சங்கம் அருகில் கொடி ஏற்றப்படடது. தொடர்ந்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக மாவட்ட செய்தி தொடர்பாளர் கோவி மோகன் வரவேற்றார். மாநகர தலைவர் வெங்கட்ராமன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெகதீஷ், வட்டார தலைவர்கள் அன்பழகன், அய்யாறு, விவசாய அணி உலகநாதன், மாவட்ட மாணவரணி தலைவர் பிரவீன், மகளிரணி சாந்தி, வளர்மதி, நகர நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், காசிநாதன், ராமச்சந்திரன், கனகராஜ் மாரிகார்த்தி, சுயம்பிரகாசம், வட்டார நிர்வாகிகள் மருதமுத்து, நடராஜன், சரவணன், மரியபிரகாசம், சேகர், சரவணன், லோகு, ரஜினி, இளைஞரணி நிர்வாகிகள் அருண்பிரசாத், அய்யப்பன், வாசுதேவன் பாண்டியன் ராகுல், குமார் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.