கடலூர்,மாவட்டம்
வடலூர்வள்ளலார்நிறுவிய சத்திய ஞானசபையில் 155. ஆவது ஆண்டு தைப்பூச திருவிழா ஜோதி தரிசனம் நேற்று முன்தினம் நடைபெற்றது இதனைத்தொடர்ந்து
வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருவறை தரிசனத்தை யொட்டி வடலூர் சத்திய ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட பெட்டி மற்றும் உருவப்படத்தை பூக்களால் அலங்கரித்து வள்ளலார் நடந்து வந்த பாதை வழியே மேளதாளம் முழங்க ஊர் வலம்தொடங்கியது
இதனைகருங்குழிகிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சமூகத்தினர்கள் தோளில் சுமந்து கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் கொண்டு சென்ற போது ,போகும் வழியில் வடலூர்,பார்வதிபுரம் கிராம மக்களும் இதைத்தொடர்ந்து செங்கால் ஓடையில் நைனார்குப்பத்தை கிராமத்தை சேர்ந்தவர்களும், பூக்கள் பழங்கள்,இனிப்புகளுடன் உடன் வரவேற்றனர்.
தொடர்ந்து இவர்கள் செல்லும் வழியில் கருங்குழி கிராமத்தினரும் பூ,பழங்களுடன் வரவேற்றனர் கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட விநாயகர் ஆலயத்திலும்,
பொதுமக்கள் சார்பில் வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து வள்ளலார் தண்ணீர் விளக்கு எரித்த ரெட்டியார் இல்லத்திலும் வைத்து வழிபாடு செய்யப்பட்டு பின்னர். வள்ளலார் வழிபாடு செய்த லட்சுமி நாராயணபெருமாள் கோயிலிலும் வரவேற்பளிக்கப்பட்டது,
மேட்டுக்குப்பம் தீஞ்சுவை ஓடையில் உள்ள மண்டபத்தில் கருங்குழி ஜெம்புலிங்கம் படையாட்சி குடும்பத்தினர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது, பின்னர் மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்திபெற்ற திருஅறைஉள்ள சித்திவளாக திருமாளிகை கொண்டுசெல்லப்பட்டது, அங்கு கிராமமக்கள் சார்பில் பழம் பூக்களுடன் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்,’ பின்னர் வள்ளலார் சித்தி பெற்றதிருஅறையினுள்
கொண்டுசெல்லப்பட்டது அரைக்கும் முன் வைத்து வழிபாடு செய்யப்பட்டது, இதனை தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் தொடங்கியது,
திரு அறை தரிசனம் 12 மணி அளவில் தொடங்கிய தரிசனம் மாலை ஆறு மணிவரை நடை பெற்றது.இதனை,பலபல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சன்மார்க்க நண்பர்கள்,சுற்றுப்புற கிராம மக்கள் என பல ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திருவறை தரிசனம் பார்த்து பரவசம் அடைந்தனர் .
திரு அறைதரிசனத்தை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நெய்வேலி போலிஸ் சரகத்தின் சார்பில் வடலூர் போலீசார் தீவிர பாதுகாப்பு ஈடுபட்டனர், சித்திவளாகத்தில்(மேட்டுக்குப்பத்தில்)பல சன்மார்க்க சங்கத்தின் சார்பில் சன்மார்க்க சொற்பொழிவுகள், அன்னதானமும் நடைபெற்றன வழக்கம்போல விழா கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.நிகழ்ச்சிஏற்பாடுகளைதெய்வநிலையநிர்வாகிஅதிகாரி, அறங்காவலர் குழு தலைவர் அறங்காவலர்கள் மற்றும் மேட்டுக்குப்பம்கிராம மக்கள் செய்து இருந்தனர்.