திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ரெட் கிராஸ் சங்கம், மாவட்ட பள்ளி கல்வித்துறை , மாவட்ட ரெட் கிராஸ் சங்கம் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தியது.
இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.பி.வெங்கடேசன், காவல் ஆய்வாளர் சு.சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் சங்கர் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட ரெட் கிராஸ் சங்க தலைவர் பா.இந்திரரராஜன் பங்கேற்று, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பற்றிய தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் கேப்டன் பிரபாகரன், பிடிஜி ஆறுமுகம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேச்சு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் பள்ளி ஜெஆர்சி ஆலோசகர் மோதிலால் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.