தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
பாராளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை நடந்திருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகிய 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.. இந்தியாவின் பிரதானமான எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய ராகுல் காந்தியை பேச அனுமதிக்காமல் இந்தந்த பிரச்சனையை மட்டும் தான் பேச வேண்டும் என்ற முறையிலும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும், சபாநாயகரும் சேர்ந்து கொண்டு வாய்ப்பூட்டு போடுகின்றார்கள். இதனை பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டதற்காக சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றார்கள் வன்மையான கண்டனத்திற்குரியதும்.. ஜனநாயக படுகொலை செய்ததை அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் கேட்க முன் வரவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்.

மத்திய பட்ஜெட் இந்திய வரலாற்றில் மோசமான ஒரு பட்ஜெட். எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் எந்த பிரிவு மக்களுக்கும் எந்தவிதமான நன்மையும் செய்யாமல் மோசமான ஒரு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்திருக்கின்றார். அனைத்து அரசியல் கட்சியினரும் நிதிநிலை அறிக்கையை கண்டித்து கண்டனத்தை கூறியிருக்கின்றார்கள். ஆனால், விஜய் மட்டும் தான் பட்ஜெட் குறித்து எதுவும் பேசவில்லை. அடுத்த ஓராண்டு காலத்திற்கு அரசு என்ன செய்யப் போகிறது என்பதற்கான ஒரு அறிவிப்பு.., ஆனால் நான் தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய கட்சியின் தலைவர் நிதிநிலை அறிக்கை சம்பந்தமாக எதுவும் சொல்லாமல் வேறு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கின்றார்.. இப்படிப்பட்டவர் தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றார். இதற்கு மக்கள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றார்கள் மிகுந்த வருத்தமாக உள்ளது. சிறிய, சிறிய கட்சிகள் கூட அறிக்கை சம்பந்தமாக கருத்துக்களை கூறியிருக்கின்றார்கள்.. அவர் பட்ஜெட்டை ஆதரிக்க கூட செய்யட்டும். ஆனால் எந்த கருத்துமே சொல்லாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்..

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ரத்து செய்து ஏதோ புதிய சட்டத்தை (VB-G RAMG) என்று நிறைவேற்றி இருக்கின்றார்கள். 100 நாள் வேலை என்பது 125 நாட்கள் ஆக்கப் போவதாக கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படித்தான் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் 95 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்தத் திட்டத்தில் ஏற்கனவே பயன்படுத்தபட்ட பயனாளிகள் வேலை தர வேண்டும் என்று சொன்னால் 4 லட்சம் கோடி நிதி உதவிகளை செய்தால் தான் 125 நாள் என்பது முடியும். ஆனால் நாளில் ஒரு பங்கு 95 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.. 25 நாட்கள் மட்டும் தான் வேலை தர முடியும். இந்த சட்டத்தை தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றது மட்டுமல்லாமல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 150 நாட்களாக வழங்குவோம் என்று புதிய வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்.. 25 நாட்களுக்கு தான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்… ஆனால் 150 தருவார்களா? என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகின்றேன்.. குறைந்தபட்சம் இதற்கான நிதி அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையை அவர் கருத்தாக அவர் வெளிப்படுத்தவில்லை. ஆகவே, ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மக்களை பிஜேபி அதிமுக சேர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

6ம் தேதி காலை சென்னையில் கன்னிமாரா நூலக வளாகத்தில் காரல் மார்க்ஸ் சிலை திறந்து வைக்கப்பட இருக்கிறது.

திமுக தரப்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை குழு மூலமாக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறும். அதன் பின்பு எத்தனை தொகுதிகள் என்பதை தெரிவிப்போம். இரட்டை இலக்கத்தில் போட்டியிட எல்லா வித முயற்சிகளையும் மேற்கொள்வோம். 234 தொகுதியிலும் எங்கு நின்றாலும் வெற்றி பெறுவோம் என்றார்..

பேட்டி : சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்….

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *