தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாசநாயக்கன்பட்டி பகுதியில் லாரியும் டெம்போ டிராவலரும் மோதி விபத்து 7 பேர் படுகாயம். போலீசார் விசாரணை.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழனி சாலையில் உள்ளது தாசநாயக்கன்பட்டி அருகே உள்ள வெள்ளை கவுண்டன் வலசு பிரிவு . இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் சேலம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த ஏழு பேர் சங்ககிரியில் இருந்து டெம்போ ட்ராவலர் ஓட்டுநர் கிருஷ்ணன் வயது 38 என்பவருடன் பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சங்ககிரி செல்வதற்காக தாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வெள்ளை கவுண்டன் வலசு பிரிவு அருகே ஒருவழிப்பாதையில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராதமாக பின்னால் வந்த டெம்போ ட்ராவலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது
இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த லாரி ஓட்டுநர் தேனியைச் சேர்ந்த முருகன் வயது 50 என்பவர் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். அதேபோல் டெம்போ ட்ராவலர் ஓட்டுநர் கிருஷ்ணன் என்பவருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. பழனியில் இருந்து ஊருக்கு புறப்பட்ட சேலம் சங்ககரியை சேர்ந்த மகேஷ் வயது 50, இந்திராணி 54, அங்கமுத்து வயது 60, கருப்பண்ணன் 46, கந்தசாமி 61, தங்கவேல் 58, சக்திவேல் 47 என்ற முருக பக்தர்கள் ஏழு பேரும் படுகாயம் அடைந்தனர்
படுகாயம் அடைந்த நபர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற ஏழு நபர்களும் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு வீட்டிற்குச் சென்றனர். இந்த விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.