சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் பெருந்தேவி தாயார் சன்னதியில் கதவின் பூட்டை நீக்கி உள்ளே நுழைந்த கொள்ளையன் உண்டியலின் பூட்டையும் கடப்பாரையால் நீக்கி உள்ளே இருந்த பணத்தை டப்பாவில் அள்ளிச் சென்றுள்ளான்

பின்னர் பின்பக்கமாக வந்த வழியாகவே சென்று டப்பாவில் இருந்த பணத்தை தரையில் கொட்டி சில்லறைகளை மட்டும் விட்டுவிட்டு நோட்டுகளை மட்டும் எடுத்து சென்றுள்ளான் கடந்த மாதம் மார்கழி வைகுண்ட ஏகாதசி ஆண்டாள் கல்யாணம் என விசேஷங்கள் நிறைந்த நிலையில் உண்டியலில் 50,000 க்கு மேல் பணம் இருந்திருக்க கூடும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்

கோவிலில் பின்பக்கம் வழியாக சுவரில் குதித்து வந்த திருடன் பெருந்தேவி மகாலட்சுமி சன்னதியில் உண்டியலில் பூட்டை உடைத்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளது தெரிய வந்தது கோவிலின் பின்புறம் மதில் சுவர்களை தாண்டி கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால் திருடன் மேலே ஏறி உள்ளே நுழைந்து இருப்பது தெரிய வந்தது

நேற்று இரவு ஒரு மணி அளவில் நடைபெற்ற சம்பவம் குறித்து அலாரம் அடிக்கவே கோவில் காவலர் சென்ற பொழுது கோவில் கதவு இருப்பது தெரியவந்தது இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே கோவிலில் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக உண்டியல் உடைக்கப்பட்டது பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *