பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினத்தையோட்டி அவரது சிலைக்கு மன்னார்குடியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெரியார் சிலையிலிருந்து அதிமுகவினர் அமைதி பேரணி நடத்தினர்.

தந்தை பெரியாரின் சிலையிலிருந்து அதிமுகவினர் ஊர்வலமாக வந்தனர் பின்னர் மன்னார்குடி ருக்மணி குளம் அருகில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளருமான ஆர்.காமராஜ் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம் மன்னார்குடி நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *