ஆண்டிபட்டி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் அண்ணா திமுக கவுன்சிலர் வெளிநடப்பு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி மன்றத்தினா மாதாந்திர கூட்டம்
அதன் தலைவர் பொன் சந்திரகலா திமுக தலைமையில் செயல் அலுவலர் ஆர் விஜயா முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேரூராட்சி மன்ற அஜெண்டா வாசிக்க ஆரம்பித்த உடன் ஆண்டிபட்டி பேரூராட்சியில் பத்தாவது வார்டு அண்ணா திமுக கவுன்சிலர் மீனாட்சி பேரூராட்சி கூட்டத்தில் பேசும் போது நடைபெறும் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பேரூராட்சி பகுதிகளில் திமுக கவுன்சிலர்கள் வார் டு களில் மட்டும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வரும் பேரூராட்சி நிர்வாகம் அண்ணா திமுக கவுன்சிலர்கள் வார்டுகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றேக் கோரி எத்தனை மனு அளிக்கப்பட்டாலும் எதிர்க்கட்சி அண்ணா திமுக என்பதால் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்று கூறி பேரூராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேரூராட்சி மன்ற அலுவலகம் முன்பு தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து அண்ணா திமுக கவுன்சிலர் மீனாட்சி செய்தியாளர்ளிடம் கூறும்போது தற்பொழுது தமிழகத்தை ஆண்டு வரும் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நிதி நெருக்கடியில் தமிழக அரசின் நிர்வாகத்தை நடத்த முடியாமல் திணை வருகிறது
என்றாலும் உள்ளாட்சி அமைப்புகளில் திமுக கவுன்சிலர்களுக்கு மட்டும் அந்தந்த பாடுகளில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் திமுக அரசு தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான இரண்டு கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமான அண்ணா திமுகவின் கவுன்சிலர்களின் வார்டு பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை இந்த பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்து மன்ற கூட்டத்தில் தர்ணா போராட்டம் மற்றும் வெளிநடப்பு செய்து என்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளேன்
இனியாவது அரசு செவி சாய்த்து ஆளுங்கட்சி எதிர்க்கட்சி வார்டுகள் என்று பாராமல் அனைத்து பொது மக்களுக்கும் அடிப்படைத் தேவைகளை செய்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்