உலகம் முழுவதிலும் புத்தாண்டை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மதுரையில் அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு மற்றும் அதிகாலை வேலைகளில் புத்தாண்டு சிறப்பு திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை ஆலயத்தில் மதுரை உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி பாப்பு சாமி தலைமையில் பங்கு தந்தை மற்றும் உதவி பங்கு தந்தையர் அருட்தந்தை பால் பிரிட்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்,

மேலும் அண்ணாநகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத்தந்த எட்வின் சகாயராஜா தலைமையிலும், டவுன்ஹால் ரோடு ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அமல்ராஜ், தலைமையிலும், ஞான‌ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்கு தந்தை மதியழகன், பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருட்தந்தை லூயிஸ், உதவி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய அருள் செல்வம், அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை அருள் சேகர், பெத்தானியாபுரம் பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ், விளாங்குடி செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் பங்குத்தந்தை அருளானந்தம் மற்றும் அனைத்து கத்தோலிக்க திருச்சபை தேவாலயங்களில் நள்ளிரவு 11 மணி முதல் 11 45 மணி வரை 2024 ஆம் ஆண்டில் இறைவன் செய்த நன்மை களுக்கு நன்றியாக நன்றி வழிபாடும், 11:45 மணி முதல் புத்தாண்டை வரவேற்று சிறப்பு திருப்பலிகளும் நடந்தது.

தொடர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறியும் பெரியவர்களிடம் சிறுவர்கள் ஆசி பெறுவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. எச்.எம்.எஸ் காலனி புதிய ஜீவிய சபையின் சார்பில் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள இயேசு அழைக்கிறார்

ஜெபகோபுரத்தில் புதுவருட வாக்குத்தத்த ஆராதனை நடைபெற்றது பாஸ்டர் டட்லி தங்கையா தலைமையில் போதகர் டென்சிங் டேனியல் புத்தாண்டு ஆராதனையை நடத்தினார்.

மற்றும் சி.எஸ்.ஐ தேவாலயங்களில் நள்ளிரவு .11.30 மணிக்கு புது வருட ஆராதனை நடைபெற்றது நரிமேடு சி.எஸ்.ஐ பேராலயத்தில் பேராயர் பிரின்ஸ் பிரபாகர் மற்றும் அனைத்து சி.எஸ்.ஐ தேவாலயங்களிலும் காலை 4.30மணிக்கு புது வருட ஆராதனை நடைபெற்றது. இவ்வாறாக கிறிஸ்தவர்கள் தங்கள் புது வருட ஆராதனை மற்றும் திருப்பலியில் பங்கேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *