பரமத்திவேலூர், பிப்:4
பரமத்திவேலூரில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே .எஸ். மூர்த்தி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
இதில் பரமத்தி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பி. பி. தனராசு, பரமத்தி தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் லலித்குமார், கபிலர்மலை தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் பி. பி. சாமிநாதன், கபிலர்மலை மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் வக்கீல் சரவணகுமார், மோகனூர் ஒன்றியம் சண்முகம்,பரமத்தி வேலூர் பேரூர் கழக செயலாளர் முருகன், பொத்தனூர் பேரூர் கழக செயலாளர் கருணாநிதி, பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர்.சோமசேகர், பாண்டமங்கலம் பேரூர் கழக செயலாளர் , பெருமாள் (எ) முருகவேல், பரமத்தி பேரூர் கழக செயலாளர் ரமேஷ்பாபு, வேலூர் பேரூர் துணை செயலாளர் செந்தில்நாதன்,வேலூர்பேரூர் அவைத்தலைவர் மதியழகன்,நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி வக்கீல் செந்தில்குமார், வக்கீல் பாலகிருஷ்ணன், பரமத்தி வேலூர் வார்டு கழக செயலாளர்கள் இராஜ பாஸ்கரன், கருப்பையா, தியாகராஜன்,நகர விளையாட்டு மேம்பாட்டு அணி சுதாகர்,நகர திமுக கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பரமத்தி வேலூர் நான்கு ரோடு அருகே அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அண்ணா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் .அதனைத் தொடர்ந்து பரமத்தி வேலூர் நான்கு ரோடு பகுதியில் இருந்து திருவள்ளுவர் சாலை, அரசு மருத்துவமனை சாலை வழியாக அமைதி ஊர்வலமாக சென்று அண்ணா சிலையை அடைந்தனர்.
பின்னர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த அமைதி ஊர்வலத்தில் திமுக சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் ,பொதுமக்களும் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.