கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் வெண்ணைமலை வட்டம், மன்மங்கலம் கிராமத்தில் பி.ஜி.பி. வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் நீமாஸ்திரா தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு குறித்த காட்சி விளக்கத்தை நடத்தினார்.
இதில் வேம்பின் சக்தியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை பூச்சி தடுப்பு திரவமான நீமாஸ்திரா, இலைத்துளை பூச்சி, சுருள் பூச்சி,வெள்ளை ஈ உள்ளிட்ட பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மாணவிகள் அறிவியல் அடிப்படையுடன் விவரித்தனர்.
இக்காட்சி விளக்கத்தின் முக்கிய நோக்கம் பாரம்பரிய இயற்கை வேளாண் முறைகளில் முக்கிய பங்காற்றும் நீமாஸ்திராவின் தயாரிப்பு முறை அதன் பயன்கள் மற்றும் விளைச்சல் பாதுகாப்பில் அதன் செயல்திறன் குறித்து விவசாயிகளுக்கு நேரடி அறிவை வழங்குவதாகவும் இதன் ஒரு பகுதியாக, விவசாயிகளின் முன்னிலையில் நீமாஸ்திரா தயாரிக்கும் முறையை செய்து காட்டினார்கள்.
இதில் வேப்பெண்ணெய் அல்லது வேப்பிலை, தண்ணீர்,மாட்டுக் கோமியம்,மாட்டுச் சாணம் ஆகியவற்றை சீரான அளவில் கலந்து 24 மணி நேரம் நன்றாக ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். தயாரிக்கப்பட்ட நீமாஸ்திராவை பயிர்களில் நேரடியாகத் தெளிப்பது அல்லது துளி தெளிப்பான் மூலம் பயன்படுத்துவது குறித்தும் மாணவிகள் விளக்கினர்.
மேலும், நீமாஸ்திரா பூச்சிகளின் உணவு உண்ணும் திறனைத் தடுத்து முட்டையிடும் திறனை குறைக்கிறது, தாவரங்களில் பாதுகாப்பு சுவரை உருவாக்குகிறது என்பதான அறிவியல் காரணங்களையும் எடுத்துரைத்தனர். இந்த காட்சி விளக்கத்தின் மூலம் மண்மங்கலம் கிராம விவசாயிகளுக்கு நீமாஸ்திரா பற்றிய நன்மைகளை எடுத்துரைத்தனர்.இந்நிகழ்வில் கல்லூரி மாணவிகள்,விவசாயிகள் கலந்து கொண்டனர்.