நீடாமங்கலம்., பிப். 04
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் அரசு மேல்நிலைப்பள்ளி பேரையூரில் இன்று கல்வியே எங்கள் இலக்கு என்ற தலைப்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு D. தயாளன் அவர்கள் தலைமையேற்றார், சிறப்பு விருந்தினராக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துறை . செந்தில்குமார் அவர்கள் மற்றும் கல்விக் கொடையாளர் திரு. ராமதாஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி .ரூபா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பள்ளியின் கணினி ஆசிரியர் P.ராஜு அவர்கள், பொறியியல் தொடர்பான தகவல்களை திருமதி G.காஞ்சனா முதுகலை இயற்பியல் ஆசிரியர் அவர்களும், மருத்துவம் சார்ந்த தகவல்களை திருமதி R. ரமலா முதுகலை உயிரியல் ஆசிரியை அவர்களும், தமிழ் பாடம் தொடர்பான தகவல்களை திருமதி சித்ரா , முதுகலை தமிழாசிரியை அவர்களும் ஆங்கிலத் தொடர்பான தகவல்களை திருமதி அபிராமி, முதுகலை ஆங்கில ஆசிரியர் (SMC)அவர்களும் மற்றும் உடற்கல்வி குறித்த தகவல்களை உடற்கல்வி ஆசிரியர் s.துரையரசன் அவர்களும் வழங்கி விழாவினை சிறப்பித்தனர், இந்நிகழ்ச்சியின் நிறைவாக முதுகலை இயற்பியல் ஆசிரியை திருமதி.R. ரமலா அவர்கள் நன்றி உரை வழங்கினார்.