சீர்காழியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் அமைந்துள்ள ச.மு.இந்து மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பிரிவில் முதலாம் ஆண்டு பயிலக்கூடிய மாணவர் மற்றும் மாணவிகளுக்காக விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் மாணவர்களுக்கு 182 மிதிவண்டிகளும், மாணவியருக்கு 58 மிதிவண்டிகளும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் மாணவ, மாணவிகளுக்கு சிறப்புரை கூறி மிதிவண்டியை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். முரளிதரன் தலைமை தாங்கினார் வகிக்க, மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலக நேர்முக இடைநிலை உதவியாளர் தி. முத்துக் கணியன் முன்னிலையிலும், சீர்காழி நகர மன்ற துணைத் தலைவர் மா. சுப்புராயன், சீர்காழி ஒன்றிய துணைத் தலைவர் ஏ.ஜி.ஜே. பிரபாகரன், சீர்காழி 7 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் நித்தியா தேவி பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, நிகழ்ச்சிகளை பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர் வி. முருகபாண்டியன் ஒருங்கிணைக்க, நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பங்கு பெற்றனர், நிறைவாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் என் . துளசிரங்கன் நன்றி கூறினார்.