C K RAJAN Cuddalore District Reporter
9488471235
கடலூரில் சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதிதியா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட டவுன்ஹாலில் நெடுஞ்சாலைத் துறை. வட்டார போக்குவரத்துக் கழகம், கடலூர் மண்டல போக்குவரத்துக் கழகம் இணைந்து நடத்திய 2 சக்கர, 4 சக்கர மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விபத்தில்லா சாலை போக்குவரத்தினை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக சாலை விதிகள் குறித்தும், வாகனங்களை பயன்படுத்துவது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் சாலை பாதுகாப்பு மாதம் 01.01.2025 முதல் 31.01.2025 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்பேரணியில் சாலை பாதுகாப்பு என்பது நமது உயிர் பாதுகாப்பு என்பதை அறிந்து செயல்படுவோம். பாதுகாப்பான வாழ்விற்கு பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவோம். விலையில்லா உயிரை விபத்தின் மூலம் இழப்பதை தடுப்போம். பேருந்தில் படிக்கட்டு பயணம் பாதையில் மரணம் என்பதை உணர்ந்து அதனை முற்றிலும் தவிர்ப்போம். ஓடும் பேருந்தில் ஓடிவந்து ஏறுவதும். பேருந்து நிற்கும் முன் இறங்குவதும் விபத்தை உண்டாக்கும். வாகனம் இயக்கிட உரிமம் இல்லாத நமது பிள்ளைகளை வாகனத்தை இயக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதி கொள்வோம். இயற்கை ஊனத்தை இயன்றவரை தடுத்து விட்டோம். செயற்கை ஊனத்தை ஏற்படுத்தும் விபத்தை முற்றிலும் தடுக்க முயற்சி மேற்கொள்வோம். சாலை விதிகளை மீறுவது தற்கொலை முயற்சிக்கு சமம் என்பதை உணர்ந்து செயல்படுவோம். வாகன இயக்கத்தின் போதும், சாலையை உபயோகிக்கும் போதும் செல்போன் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலை) சிவக்குமார். கோட்டப் பொறியாளர் (சாலை பாதுகாப்பு) ஸ்ரீகாந்த்,
வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம்,
கடலூர் போக்குவரத்து ஆய்வாளர் சோமசுந்தரம், நெய்வேலி போக்குவரத்து ஆய்வாளர் பிரான்சிஸ் விருதாச்சலம் போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன், பண்ருட்டி போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன்,
தமிழ்நாடு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் (கடலூர் மண்டலம்) ராகவன், துணை மேலாளர் ஸ்ரீராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.