எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் ரூ.1.40 கோடியில் புதிய கட்டடங்கள் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்த பின் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி பகுதியில் பல்வேறு வசதிகளுடன் புதிய மீன் மார்க்கெட் கட்டிடம் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்த புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து மீன் மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் திமுக நகர செயலாளர் தம்பி மா சுப்பராயன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பாஸ்கர் ராமு ஜே.கே.செந்தில் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தொடங்கி வைத்தனர்.
இதேபோல் சீர்காழி 3-வது வார்டில் ரூபாய் 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட படிப்பகம் கட்டடத்திலின முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் தொடர்ந்து எம்எல்ஏ பன்னீர்செல்வம் குத்து விளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு அளித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.