தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கல்வியின் தரம் உயா்வதற்கு மாநகராட்சி சாா்பில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை உருவாக்கி கொடுத்துள்ளனா். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் மாநகராட்சி பள்ளியில் 8ம்வகுப்பு மாணவி அஸ்மா மாநில அளவில் முதலிடமும் 6ம் வகுப்பு படித்து வரும் தெசிலன் சித்தார்த் மாநில அளவில் இரண்டாம் இடமும் மற்றும் 5ம்வகுப்பு படித்து வரும் மித்ராஸ்ரீ ஆகிய மாணவ மாணவிகள் வெற்றி பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கங்களைப் பெற்றுள்ளனா். இந்நிலையில் வரும் 6ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பெங்களூரில் நடைபெற இருக்கும் சர்வதேச அளவிலான யோகா போட்டியில் கலந்து கொள்ள மூன்று மாணவ மாணவிகளும் தகுதி பெற்றனர்.
இந்நிலையில் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் எமல்டா வெலன்சியா ஹெஸியா முன்னிலையில் மேயர் ஜெகன் பெரியசாமியை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர். அப்போது மேயா் ஜெகன் பொியசாமி வெற்றி பெற்ற ஒவ்வொரு மாணவ மாணவிகளிடம் படிப்பு மற்றும் குடும்ப விபரங்களை கேட்டறிந்தார் அப்போது பெங்களூரில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டியில் வெற்றி பெற்று மாநகராட்சி பள்ளிக்கும் உங்களின் ஆசிரிய பெருமக்களுக்கும் தாய் தந்தையருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறினார்