தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குற்றச்சம்பங்கள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்-புதிதாக பதவியேற்ற டிஎஸ்பி சிவக்குமார் தகவல்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பணியாற்றி வந்த டிஎஸ்பி சுரேஷ் குமார் பணிமாறுதலில் சென்றதையடுத்து, கோயம்பத்தூர் பேரூரில், டிஎஸ்பி யாக பணியாற்றி வந்த சிவக்குமார் தாராபுரத்திற்கு பணி மாறுதலாகி புதிதாக பொறுப்பேற்றுகொண்டார். பொறுப்பேற்ற டிஎஸ்பிஐ, மரியாதை நிமித்தமாகவும், போலீசார் நிருபர்களுக்கிடையே நட்புறவை வலுப்படுத்தும் விதமாகவும் நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நிருபர்களிடம் DSP தெரிவிக்கையில்., தாராபுரத்தில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாத வகையில், போலீசாரின் ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும்.. பொது மக்கள் எந்த நேரமும் காவல் நிலையத்தை நேரில் அணுகி தங்களது குறைகளை , தெரிவிக்கலாம்..
தவிர குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அது குறித்து தொலைபேசியின் வாயிலாக எந்தநேரமும் தொடர்பு கொண்டு போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.