கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்


இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில், முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி தொகுதி உட்பட்ட வடக்கு ஒன்றிய இளைஞரணி மற்றும் பாக முகவர் இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. விருதுநகரில் வரும் 7-ம் தேதி தென்மண்டல திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கமுதி தனியார் திருமண மஹாலில், நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத்ராஜா மாவட்ட துணை அமைப்பாளர்கள் சத்தியேந்திரன்,குமரகுரு, முன்னாள் ஊராட்சி ஒன்றியதலைவர் தமிழ்செல்வி போஸ், முன்னாள் துணை ஒன்றியதலைவர் அய்யனார், வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிரஞ்சீவி, வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாஸ்கரன் , மணிகண்டன் வீரபிரகாஷ் ,தேவஅரசன், முனீஸ்வரன், தீரேஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள்,மாவட்டகழக,ஒன்றிய கழக நிர்வாகிகள்மற்றும் கிளைகழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *