அல் அமீன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘சமத்துவ பொங்கல் விழா’ நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் அன்பரசி தலைமை தாங்கினினர்.
சிறப்பு விருந்தினராக இன்னர்வீல் சங்கத்தின் தலைவர் டாக்டர் பிரபா சரண் பங்கேற்றார் அப்போது அவர் பேசியதாவது:-
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் தமிழ் மாதத்திலே மிகச் சிறப்பு வாய்ந்த மாதமாக விளங்குகிறது
தை மாதம் தமிழர் திருநாளான தை பொங்கலை அறுவடை திருநாளாக கொண்டாடுகிறோம். பொங்கல் பண்டிகையானது வேளாண்மையை அடிப்படையாக கொண்ட நாள்.
ஆதிகாலம் தொட்டு இன்று வரை தமிழர்களின் அடையாளமாக விளங்குவது உழவுத்தொழிலே. இந்த உழவுத்தொழில் மூலம் உலகிற்கே உணவைத் தந்து மக்களை வாழ வைப்பவன் விவசாயி. இதனையே கம்பர் தனது ஏரெழுபது என்ற நூலில்
“செங்கோல் நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோல்” என்றார்.
இவ்வாறு விவசாயத்தின் மகிமைகள் மற்றும் உழவரின் பெருமைகள் குறித்து மாணவர்களிடையே உரையாடினார்.
அனைவரும் ஒன்றிணைந்து வண்ண கோலமிட்டு கரும்பு, வாழை, மஞ்சளுடன் புதுப்பானையில் பொங்கலிட்டு தமிழர் பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.
விழாவில், கல்லூரியின் இயக்குநர் பேராசிரியர் எம். நஜிமுதீன், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.