இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் உறுப்பினர் ராமலக்ஷ்மி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சிறப்பு அழைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி கலந்துகொண்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரைஆற்றினார்
மேலும் காங்கிரஸ் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் பி ஆர் என் ராஜாராம் பாண்டியன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுதுணைத் தலைவர் வேலுச்சாமி, மாநிலச் செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜோதிபாலன், நகர் தலைவர் அகமது கபீர், மாநிலச் செயலாளர் திருமதி மில்கா செந்தில்குமார், மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் காஜா நஜிமுதீன், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.