கரூர் செய்தியாளர் மரியான் பாபு
பாமக தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.. எடப்பாடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளால் திமுக-வினர் சிறை செல்வார்கள்.கரூர் மாவட்டத்தில் பாமக மாநில இளைஞர் சங்க செயலாளர் வடிவேலன் பேட்டியளித்தார். கரூரை அடுத்துள்ள தாந்தோணிமலை, காளியப்பனூரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கரூர் கொங்கு பிரேம்நாத்தின் அன்பு இல்லத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில துணை தலைவர் மருத்துவர் மணி, மாநில இளைஞர் சங்க செயலாளர் வடிவேலன், மாநில உழவர் பேரியக்க செயலாளர் பொன்.ரமேஷ், மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்ட மாநில மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் நிறைவில் திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த துண்டறிக்கையை வெளியிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில இளைஞர் சங்க செயலாளர் வடிவேலன், வருகிற 10-ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் மாநில இளைஞர் சங்க கூட்டத்திற்கு கரூர் கிழக்கு மாவட்டம் சார்பாக 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி180 இடங்களுக்கு மேலாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் எனவும்,கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதியும் அதிமுக கூட்டணி வெல்லும் எனவும்,
இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தீவிரமாக தேர்தல் பணியாற்றுவது என முடிவு செய்துள்ளதாகவும்,தமிழகத்தில் அதிகப்படியாக புழக்கம் உள்ள கஞ்சா,கிட்னி திருட்டு,குவாரிகள் முறைகேடு போன்றவைகளால் திமுகவினர் சிறை செல்வார்கள் என தெரிவித்தார்.