தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
வருவாயை பெருக்கும் நோக்கில் பேருந்து நிலையத்தில் 64 கடைகள் மறு ஏலம் விட முடிவு.நகர் மன்ற கூட்டத்தில் 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாராபுரம் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மொத்தம் 78 தீர்மானங்கள் தீர்மான நகலாக ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. நடைபெற்ற கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டு 67 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் குடிநீர் மற்றும் போர்வெல் பராமரிப்பு பணிக்காக சுமார் 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3 பொது சுகாதார கழிப்பிடத்தை பராமரிக்க சுமார் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோல் மழை நீர் வடிகால் இதர தேவைகள் மறு சீரமைப்பு வசதிக்காக 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தார் சாலை மேம்படுத்தவும் மறு சீரமைப்பு செய்வதற்காக 53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தாராபுரம் நகராட்சியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் மொத்தம் 64 கடைகள் உள்ளது.
இந்த கடைகளுக்கு ஏலம் விடப்பட்டிருந்தது. நகராட்சிக்கு வருவாய் குறைவாக இருந்த காரணத்தினால் பேருந்து நிலையத்தில் உள்ள 64 கடைகளும் நகராட்சிக்கு வருவாயை பெருக்கும் நோக்கில் அனைத்து நகரமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தோடு மறு ஏலம் விட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் பெரும்பான்மையான நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.