தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூபாய் 1.70. கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயிரிவாயு மற்றும் இயற்கை உர ஆலை மையத்தின் செயல்பாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து போடிநாயக்கனூர் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த நகராட்சி நகர் மன்றத் தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகராட்சி ஆணையாளர் சுதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி உயிரி வாயு இயற்கை ஆலை மையத்தை திறந்து வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் வி. குணசேகரன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம் சங்கர் மேலாளர் ஜலாலுதீன் சுகாதார அலுவலர் மணிகண்டன் கட்டிட ஆய்வாளர் சுகதேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *