தமிழரின் கலாச்சாரம் நிறைந்த பொங்கல் விழாவை கொண்டாட இந்தியா வந்துள்ள பிரான்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளை சார்ந்த தமிழர்கள் 60-பேர் பிரான்ஸ் தமிழ் கலாச்சாரம் மையம் தலைவர் திரு.இலங்கை வேந்தன் அவர்கள் தலைமையில் புதுச்சேரி கீழ் பரிக்கல்பட்டு கிராமத்திற்க்கு வந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.
அவர்களை தமிழரின் பாரம்பரிய கலாச்சாரம் நிறைந்த பனை மரத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி நிறுவனர் பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் ஏற்பாட்டில் அனைவருக்கும் பனை ஓலை பொருட்கள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை Dscs- நிர்வாகிகள் வண்டி முத்து, பாலசந்தர், ரவிச்சந்திரன் தலைமையில் டோன்ட் வேஸ்ட் புட் ஸ்டீபன் ராயப்பா, சமூகன் சரவணன், பனை ஜூஸ் ராமலிங்கம், அன்பே சிவம் அன்பு, சவிதா,வாண்ரப்பேட்அப்துல் காதர், பிரவின், விமல், கி.வா. இளைஞர் மன்ற நிர்வாகிகள் வேல்முருகன், கார்த்திகேயன், சிவ.அருள்முருகன், பல்லவி அறக்கட்டளை , ஹேமலதா, புதுச்சேரி சிவசந்திரன், மாணவி சமிக்சா, மாணவன் சக்திபாலன், உட்பட தன்னார்வளர்கள் செய்திருந்தனர்.
அயலக வாழ் தமிழர்களிடையே ஆதி தமிழன் வாழ்வே டு கலந்த வாழ்வியல் மரமான பனை மரத்தின் பயன்களை எடுத்துரைக்கப்பட்டது. அவர்கள் ஆர்வமுடன் கேட்டு தங்கள் நாடுகளில் பனை மரத்தின் பயன்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சிகள் எடுப்பதாக உறுதி பூண்டனர்.