பாட்டாளி மக்கள் கட்சி உழவர் பேரியக்கம் சார்பில் தைத்திருநாளில் கொடியேற்றி உறுதிமொழி ஏற்பு…….
திருவாரூர் மாவட்டம், குடவாசல் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள
மருதவஞ்சேரி – கோவில்பத்து, அதம்பார்-ஜெகநாதபுரம், நெம்மேலி – கல்லுக்குடி ஆகிய பகுதிகளில் இனமானக்காவலர்
மருத்துவர் அய்யா, மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் விவசாயிகளின் போராளி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP ஆகியோரின் நல்லாசியுடன் உழவர் திருநாளாம் தைத்திருநாளில் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடி உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் இங்கு சென்ற மாதங்களில் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக ஈரப்பதம் 18 சதவீதத்திலிருந்து மாற்றி 21 சதவீதமாக எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசை தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பாக வலியுறுத்தப்படுகிறது
என்றும் மேலும் விவசாயம் செழிக்கவும், இயற்கை வளம் பெருகி இயற்கை விவசாயம் செய்து மன்னை பாதுகாக்கவும் உழவர்களுக்கும் உழைக்கும் விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டிய சலுகைகளை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் உறுதிமொழி ஏற்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில துணைச்செயலாளர் வேணு.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உழவர் பேரியக்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் உலகநாதன், மாவட்ட தலைவர் ராஜா, மாவட்ட துணை தலைவர் பழனி,மாவட்ட துணை செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, பாட்டாளிமக்கள் கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் அருண்குமார், மற்றும் இளைஞர் சங்க நிர்வாகிகள் அனுகுல், ராஜேந்திரன், செந்தில், சிவா மற்றும் குடவாசல் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.