ராஜபாளையம் வ,உ,சி,நகரில் வசித்து வருபவர் கோகுல்(39) நாகர்கோவிலை சேர்ந்த இவர் இங்கு மனைவி,மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வாகன காப்பீடு தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வேலைகளை முடித்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு செல்ல சத்திரப்பட்டி சாலை தனியார் நூற்பாளை அருகே சென்றபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார்,
தகவலறிந்த தெற்கு காவல் நிலைய,எஸ்ஐ,
முத்துக்குமரன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த,இன்ஸ்பெக்டர்,
செல்வி, லாரியை ஓட்டிவந்த தூத்துக்குடியை சேர்ந்த செல்லம்(57) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்,சம்பவம் அறிந்து வந்த கோகுலின் மனைவி தன்சியா,
குழந்தைகளுடன் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.