தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் முன்னனி நிறுவனமான தனிஷ்க் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது
தங்கம் வைர நகைகளை வாங்கிவோருக்கு ‘தங்கத்தை பரிமாற்றம் செய்யும் திட்டத்தை நீட்டிக்கும் தனிஷ்க் முன்கூட்டியே தங்கம் வாங்குவோருக்கு ‘சிறந்த தங்க விலை’ மற்றும் ‘தங்கத்தை மாற்றி வைரத்தைப் பெறுவது’ ஆகிய திட்டங்களை அறிமுகம் செய்கிறது
இந்தியா முழுவதும் மக்களின் ஆழமான நம்பிக்கையைப் பெற்ற டாடா குழுமத்தின் நகை பிராண்டான தனிஷ்க், சச்சின் டெண்டுல்கரின் ஆதரவு பெற்ற நாடு தழுவிய திட்டமான ‘தங்கத்தை மாற்றும் திட்டத்தை’ நீடித்துள்ளது்..
அதன் படி தனிஷ்க் நிறுவனங்களின் அனைத்து கிளைகளிலும் தங்கத்தை எளிதாக மாற்றவும், புத்திசாலித்தனமாக வாங்கவும் உதவும் வகையில் இரண்டு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள, பழைய தங்கத்தை மாற்றும்போது எந்தக் கழிவும் இல்லாத (0% deduction) திட்டத்துடன் சேர்த்து, தங்கத்திற்கு முன்கூட்டி பணம் செலுத்தும்போது, வாங்குவோருக்கு சிறந்த தங்க விலை பெறுவது,மற்றும் தங்கத்திற்குப் பதில் வைரத்தை மாற்றிக்கொள்ளும் வசதி என இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளனர்..
இது தொடர்பாக கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள தனிஷ்க் கிளை மேலாளர் கூறுகையில், தங்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பை வெளிக்கொணர்ந்து, பயனடைவதற்கு இந்த கூடுதல் சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு அதிக வழிமுறைகளை வழங்குவதாக தெரிவித்தனர்…
அதன் படி,சிறந்த தங்க விலை (BGR) சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே நகைகளை முன்பதிவு செய்து தங்கத்தின் விலையை உறுதி செய்து கொள்ளலாம்.
பில் போடும் நேரத்தில், முன்பதிவு செய்த விலை அல்லது அன்றைய சந்தை விலை ஆகிய இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ, அந்த விலையே வசூலிக்கப்படும். இந்தச் சலுகை பிப்ரவரி 25 வரை செய்யப்படும் முன்பதிவுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவித்தனர்…