இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் பசுமை பொங்கல் விழா
நாகப்பட்டினத்தில் புதிய கடற்கரையில் கிரீன் நீடா அமைப்பின் சார்பாக பசுமை பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மரக்கன்றுகள் நடுதல், துணிப்பை வழங்குதல், பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் குழந்தைகள் தினத்தில் பனை விதைகள் நட்ட குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.