எம்ஜிஆர் அவர்களின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
இந்நிகழ்விற்கு அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவரை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.