கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம், தரகம்பட்டி, கரூர் புறநகர் மாவட்ட தேமுதிக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு இலவசமாக பச்சரிசி, வெல்லம், நெய், கரும்பு, திராட்சை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய விஜயகாந்த் உருவ படம் அச்சடித்த மஞ்சள் பையில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் சிவம் ராஜேந்திரன் தலைமையில் விஜயகாந்த் திரு உருவப்படத்திற்கு பூஜை செய்து பொங்கல் தொகுப்பு வழங்கினர்.உடன் கே.ஆர்.ஆல்வின் கடவூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர், மற்றும் அக்கட்சியின் கழக நிர்வாகிகள்,தூய்மைபணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.