கோவை06. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த தொழிலாளர் கூடுதல் ஆணையாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
வால்பாறை தோட்டத்தொழிலாளர்கள் கூலி உயர்வு தொடர்பாக தமிழ்நாடு தோட்ட அதிபர் சங்கம், ஆனைமலை தோட்ட அதிபர் சங்கம், நீலகிரி, வயநாடு அதிபர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர்

இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் புதிய ஒப்பந்தத்தின்படி தேயிலைத் தோட்டங்கள் 1.7.2025 முதல் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.475‌ வழங்கி வந்தது. தற்போது ஏற்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் ரூ.481.54 வழங்கப்பட்டு வழங்கி வருகிறது.
ஆனால் வால்பாறையில் 10 சிறு தேயிலை தோட்ட நிறுவனங்களும், நீலகிரி மாவட்டத்தில் 9 நிறுவனங்களும், ஏற்காட்டில் 2 நிறுவனங்களும் ஒப்பந்தப்படி ஊதியம் வழங்காமல் ரூ.427, ரூ.435 என வழங்கி வருகின்றனர்.

இதனால் வால்பாறை, நீலகிரி அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 6 ஆயிரம் பேரும், சிறு தோட்டங்களில் பணியாற்றும் 4 ஆயிரம் பேரும் என 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை.

இதற்கு தொழிலாளர் துறை சார்பில் தொழிற்சங்கம், தோட்ட நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் நிர்வாகத்தினரைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் வால்பாறையில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த பிரச்சினை தொடர்பாக கோவை தொழிலாளர் துறை துணை ஆணையர் ராஜ்குமார் முன்னிலையில் தொழிற்சங்கத்தினர், தோட்ட நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் முடிவு ஏற்படவில்லை.பேச்சுவார்த்தை
அதன் தொடர்ச்சியாக தொழிலாளர் துறை கூடுதல் ஆணையாளர் சாந்தி முன்னிலையில் தொழிற்சங்கத்தினர்,

சிறு தோட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை தொழிலாளர் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் ஒரு சில நிறுவனங்கள் கூலி வழங்க முன் வந்தனர். வருகிற 11-ந் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை கூடுதல் ஆணையாளர் முன்னிலையில் நடத்தப்பட உள்ளது. அதுவரை தொழிற்சங்கத்தினர் எவ்விதப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்றும், நிர்வாகங்களும் எந்த முடிவு எடுத்தாலும் தொழிலாளர் துறை முன்னிலையில் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தொழிற்சங்கம் தரப்பில் எம்.ஜி.ஆர். தோட்ட தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் வால்பாறை வீ.அமீது, ஜெகநாதன், எல்.பி.எப். சவுந்தர பாண்டியன், வினோத் குமார், வி.சி.கே. கேசவமருகன், ஏ.ஐ.டி.யூ.சி. மோகன், கல்லார் அண்ணாதுரை, கருப்பையா மற்றும் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


இதுகுறித்து வால்பாறை வீ.அமீது கூறும்போது, அடுத்த கட்டமாக தொழிற்சங்கங்கள் நீலகிரி வால்பாறையில் உள்ள அரசு தோட்டங்களுக்கு தோட்டங்களுக்கு தனியாருக்கு இணையாக சம்பளம் வழங்க குன்னூரில் உள்ள நிர்வாக இயக்குனரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வால்பாறையை அடுத்துள்ள அரசு தேயிலை தோட்ட கழகத்தில் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு, தினக்கூலி உயர்த்தி வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது என்றார் இதுகுறித்து சிறு தோட்ட நிர்வாகத்தினர் கூறும்போது, அரசு தேயிலை தோட்டங்களில் கூட தனியாருக்கு இணையான ஊதியம் வழங்கவில்லை. ஆனால் எங்களை தொழிற்சங்கங்கள் கட்டாயப்படுத்தி வருகிறார்கள் என்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *