ஆந்திராவில் இருந்து ஐயப்ப பக்தர்கள் கேரளா ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு விருத்தாச்சலம் வழியாக வயலூர் மேம்பாலத்தை கடக்கும்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் காரில் விருத்தாசலம் அருகே உள்ள கோனான்குப்பம் மாதா கோவிலுக்கு சென்று விட்டு வயலூர் மேம்பாலத்தை கடக்கும்போது எதிரே வந்த ஆந்திரா பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது இதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழப்பு ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .கார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.