சென்னை அண்ணாநகர் எஸ் பி ஓ ஏ பள்ளியைச் சேர்ந்த சாதனை மாணவர் கோ. ரோஹித் அவர்கள் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா

முன்னிட்டும் திருக்குறளை தேசிய நூலாக்க வலியுறுத்தியும் 1330 திருக்குறளை மூன்று மொழிகளில் துணிப்பதாகை திருவள்ளுவர் உருவத்தில் எழுதி ஆல் இந்தியா புக் ஆஃப் உலக சாதனை நிறுவனம் முன்னிலையில் சாதனை படைத்துள்ளார்…
இதற்கு இவர் எடுத்துக் கொண்ட நேரம் 8.23மணி நேரம் என மிகக் குறைந்த நேரத்தில் இந்த சாதனையை செய்து முடித்திருக்கிறார்கள் ரோஹித்சிறு வயதில் இருந்தே பல்வேறு சாதனைகளை செய்து வரும் சாதனையாளர்.
ரோஹித் அவர்கள் திருக்குறள் மீது இருந்த பற்றின் காரணமாக பலமுறை திருக்குறளை படித்தும் மனப்பாடம் செய்தும் இருக்கும் மாணவர் திருக்குறள் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் பல்வேறு இடங்களில் பரவ வேண்டும் என்ற காரணத்தால் இந்த முயற்சி எடுத்து வெற்றி கண்டுள்ளார்
இதற்கு முன் மூன்று மொழிகளில் திருக்குறளை விளக்கத்தோடு பேசி பன்மொழி வித்தகர் என்ற விருதினை பெற்றார் மேலும் திருக்குறள் தொடர்பாக மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது