முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசியில் அமமுக சார்பில் மலை அணிவித்து மரியாதை ;-
தென்காசி மாவட்டம், புதிய பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108 – வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் அருணகிரி சாமியின் தலைமையில் எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், தென்காசி நகரச் செயலாளர் நெல்சன், முன்னிலை வகித்தார்.
மாவட்ட அவைத் தலைவர்
இப்ராஹிம் ஷா, மாவட்ட பொருளாளர் இசக்கி பாண்டியன், கலை இலக்கிய அணி பரமசிவன், மகளிர் அணி வேலம்மாள், இளைஞர் பாசறைச் செயலாளர் சுபாஷ், மகளிர் பாசறைச் செயலாளர் ஜானகி, தொழிற்சங்க செயலாளர் பாலகணேஷ், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேல் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், கீழப்பாவூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் பெரியசாமி, ஆலங்குளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் முருகன், பேரூர் கழகச் செயலாளர் குற்றாலம் கோட்டையசாமி, இளஞ்சி சிவ சுப்பிரமணியன், ஆலங்குளம் ஒன்றிய அவைத்தலைவர் (பொறுப்பு) அண்ணாதுரை மற்றும் நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் எம்ஜிஆரின் சாதனைகள் மற்றும் மக்கள் சேவைகள் பற்றியவையும் நினைவுகூரப்பட்டன.