எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே கப்பலில் பொறியாளராக பணியாற்றிய மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை ஆட்சியரிடம் புகார்.உரிய விசாரணை செய்ய அரசுக்கு கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் அண்ணன் பெருமாள் நகரை சேர்ந்தவர் குணசேகரன் இவரது மகன் சந்தான பாரதி பொறியியல் பட்டதாரி.இவர் கடந்த 01.12. 2024 அன்று D’AMICO SHIP ISHIMA INDIA PVT LTD கம்பெனியின் கீழ் இயங்கும் குஜராத்தில் உள்ள M.T.High Tide கப்பலில் உதவி பொறியாளராக பணிபுந்து வந்துள்ளார்.கடந்த சில நாட்களாக உடன் பணி புரியும் உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக தொலைப்பேசியில் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவரது அலுவலகத்தில் இருந்து கடந்த16 ஆம் தேதி சந்தான பாரதி குஜராத்தில் உள்ள கப்பலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.இன்று சந்தான பாரதி உடல் தனியார் ஊர்த்தி மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.அப்போது அவரது இறப்பு சான்றிதழில் 17ஆம் தேதி இறந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் தன்மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து தங்கள் மகன் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
புகார் மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிந்தாக ஆட்சியர் கூறினார்.மேலும் இறந்த சந்தான பாரதியின் உடல் குஜராத்திலிருந்து விமானமூலம் சென்னை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊரேக்கு கொண்டு வரப்பட்டது.
இறந்தவரின் உடல் சொந்த ஊருக்கு வந்த போது உடன் பணிபுரிந்தவர்களோ நிறுவன ஊழியர்களோ வராததால் தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதால் அரசு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்