தேனி மதுரை ரோடு பங்களாமேட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் ஜுவல்லரி 6 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன்,பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார்,பிரபல திரைப்பட நடிகை சிருஷ்டி டாங்கே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கேக் வெட்டினர்.

இந்நிகழ்விற்கு தேனி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.முத்துசித்ரா, வர்த்தக சங்க தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார்,தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் மண்டல தலைவர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம்,திமுக நகர கழக செயலாளர் நாராயண பாண்டியன்,ஜோஸ் ஆலுக்காஸ் ஜுவல்லரி நிறுவன மேலாளர் கிரேசியஸ்,தேனி கிளை மேலாளர் தேவராஜ்,உதவி மேலாளர் சசிக்குமார்,கணக்கு மேலாளர் சோபின் மேத்யூ , வர்த்தக சங்க பிரமுகர்கள் மற்றும் ஜோஸ் ஆலுக்காஸ் ஜுவல்லரி நிறுவன பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.முத்துசித்ராவிடம் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் காத்திருப்பு நிழற்குடை அமைப்பதற்காக ரூ.5,53,500 /- காசோலையாக ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கினர்.