கோவை மற்றும் திருப்பூரில் இந்திய அனைத்து ஆடைகள் நல அமைப்பு சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த மகளிர்க்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா

இந்திய அனைத்து ஆடைகள் நல அமைப்பின் சார்பாக கோவை மற்றும் திருப்பூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ஆன நவாஸ்கனி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ஹாஜி.எஸ்.எம்.
ஹிதாயத்துல்லா ஆகியோர் இணைந்து வழங்கினர்..

இந்திய அனைத்து ஆடைகள் நல அமைப்பின் சார்பில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் குடியரசு தின விழா கோவை உக்கடம் பகுதியில் அக்வாய் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில்,(AGWOI) அக்வாய் அமைப்பின் செயல் தலைவர் டாக்டர் ஜி.எம்.முகம்மது ரபீக் தலைமை தாங்கி பேசினார்..

அப்போது பேசிய அவர்,இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் முன்னனி மாநிலமாக வரும் 2030 ஆண்டுக்குள் மாற்றுவோம் என்ற தமிழக முதல்வரின் இலட்சியத்திற்கு துணை நிற்கும் வகையில் பெண்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களையும் தொழில் முனைவோர்களாக மாற்றும் பணிகளை செய்து வருவதாக கூறினார்…

முன்னதாக விழாவில், அக்வாய் நிறுவனர் ராணா ரபீக் வரவேற்புரையாற்றினார்,நிகழ்ச்சியில் துரை,கவிதா,கலை,உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்..

முன்னதாக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக நேசம் வளர்த்து தேசம் காப்போம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது..

இதில் தொழிலாளர்கள் நலன் சார்ந்த தமிழக அரசின் நலத்திட்டங்களை குறித்து நிர்வாகிகள் பேசினர்..

இதனை தொடர்ந்து தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது இதே போல திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பொதிகை ஹாலில் நிகழ்ச்சி நடைபெற்றது..

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் , தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான நவாஸ்கனி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ஹாஜி.எஸ்.எம்.ஹிதாயத்துல்லா.,ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.

விழாவில், ஆடிட்டர் கலீமூதீன், திருப்பூர் ஐக்கிய ஜமாத் தலைவர் ஜக்கிரிய்யா,50வது வார்டு மாமன்ற உறுப்பினர் பெனாசிர் நசிருதீன்,அருள்தாஸ், மார்ட்டின் சுரேஷ்,மகாலிங்கம்,அருணாச்சலம்,ஜாஹிர்,ரஹ்மத்துல்லாஹ்,குமார் உட்பட அக்வாய் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *