எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக ரூபாய் 6 கோடியே 38லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 779 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார் :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி சீர்காழி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ரூபாய் 6 கோடியே 38லட்சத்து 50,000 ரூபாய் மதிப்பில் 23 ஊராட்சிகளை சேர்ந்த 779பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக இலவச வீட்டுமனை பட்டாவை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், வழங்கினார்

இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம். முருகன் எம்.பன்னீர்செல்வம், ,மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் பேசுகையில் வரும் காலங்களில் அடுத்தடுத்து வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்ட வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.