காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேச்சேரி, எம்.காளிப்பட்டியில் அமைந்துள்ள காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறையின் சார்பில் நவீன நுண்ணுயிரியல் துறையில் உருவாகும் புதிய புதுமைகள் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்விற்கு தி காவிரி கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் இளங்கோவன் தலைமை வகித்தார் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் செல்வக்குமார் வரவேற்று பேசினார்.

நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தென்கொரியா நாட்டின் ஜியொன்பங் தேசிய பல்கலைக்கழகத்தின் உயிர் தொழில்நுட்பவியலின் பேராசிரியர் முனைவர் கமலக்கண்ணன் பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.

மற்றும் பெரியார் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையின் இணைப் பேராசிரியர் அய்யாசாமி முதன்மை அழைப்பாளராக பங்கேற்று கருத்துரை வழங்கினார்.

இப்பன்னாட்டு கருத்தரங்கில் இன்றைய காலத்தின் நுண்ணுயிரிகள் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்புக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றியும் பல்வேறு தொழில்துறைகளில் நுண்ணுயிர்களின் செயல்பாடுகளும் அதன் நன்மைகள் குறித்து எடுத்துரைப்பதோடு நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தில் கிடைக்கின்ற பொருட்கள் பயன்படுத்தி எவ்வாறு சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பது குறித்தும் பன்னாட்டுக் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

காவிரி கல்வி நிறுவனங்களின் கெளரவத் தலைவர் நடேசன் தலைவர் அன்பழகன், தாளாளர் இராமநாதன், துணைத் தலைவர் மதன் கார்த்திக், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், நிர்வாக அதிகாரி கருப்பண்ணன் , புல முதன்மையர் மாணவர் சேர்க்கை பிரிவு நந்தகுமார் ஆகியோர் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நிறைவாக காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் தில்லைநாயகி நன்றி கூறினார் நிகழ்வில் பல்வேறு கல்லூரி, பேராசிரியர்கள், பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் பல கல்லூரி சேர்ந்த மாணவ மாணவிகள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் சிறப்புற ஒருங்கிணைத்து நடத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *