பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 25-வது ஆண்டு வெள்ளி விழா & தங்க நட்சத்திர விருது வழங்கும் விழா..
பரணி பார்க் பள்ளி 2001ம் ஆண்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.பரணி பார்க் பள்ளியில் 25வது ஆண்டு வெள்ளி விழா & தங்க நட்சத்திர விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்விக் நிறுவனங்களின் தாளாளர் S.மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன் தலைமை தாங்கினர். பரணி பார்க் கல்விக் குழும அறங்காவலர்கள் சுபாஷினி அசோக் சங்கர், வனிதா அருண் விஜயன் முன்னிலை வகித்தனர். ஸ்ரீசங்கர வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியின் தாளாளர் அசோக் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவ்விழாவில் படிப்பு, விளையாட்டு, இலக்கியம், நடனம், பட்டிமன்றம், அறிவியல் ஆராய்ச்சி, யோகா போன்ற பல்வேறு பிரிவுகளில் சர்வதேச, தேசிய சாதனைகள் படைத்த 148 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்க நட்சத்திர விருது வழங்கிப் பாராட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி, எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன் தலைமையில் பரணி பார்க் பள்ளி முதல்வர் K.சேகர், துணை முதல்வர்கள் G.நவீன்குமார், K.மகாலட்சுமி, P.ரேணுகாதேவி, ஒருங்கிணைப்பாளர்கள் V.பானுப்பிரியா, A.கணேசன், N.செல்வசங்கீதா மற்றும் இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர். செய்தியாளர் கரூர் மரியான் பாபு