கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் தமிழ் மக்கள் கலை விழா..
ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே
கபிஸ்தலத்தில் தந்தை பெரியார் அறிவியல் கலை பண்பாடு விளையாட்டு மன்றம் சார்பில் 19ம் ஆண்டு -2025 தமிழ் மக்கள் கலை விழா தஞ்சை மாவட்ட திராவிட கழக தலைவர் அமர்சிங் தலைமையில் நடைபெற்றது.விழாவில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம், திராவிடக் கழக பொதுச்செயலாளர் அன்புராஜ், பாபநாசம் முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் .
விழாவில் கலை விருந்து,தமிழ் இசை, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், வாணவேடிக்கை, மின்னல் வேக நிகழ்வுகள் பொம்மலாட்டம், பறை இசை, மக்கள் இசை நிகழ்ச்சி, உருமி மேளம் ஆகிய நிகழ்ச்சிகள் அந்தி முதல் தொடங்கி விடியும் வரை மக்கள் ஆரவாரத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் கபிஸ்தலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆட்டம் பாட்டத்துடன் கண்டுகளித்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் முருகவேல் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் செய்திருந்தனர்.