கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் மாவட்ட மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூர் காவல் நிலையம் அருகில் உள்ள கொடி காத்த குமரன் சிலை அருகில் மக்கள் உரிமைக் கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கும், காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கும் சுதந்திரக் கொடியும், இனிப்பும் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட தலைவர் விவேகானந்தன், மாவட்ட செயலாளர் ரமேஷ் , மாவட்ட பொறுப்பாளர் தங்கபாண்டியன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் இளங்கோவன், மாவட்ட நகர தலைவர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் தலைவர் சங்கர், மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் செயலாளர் மாரிமுத்து, மகளிர் அணி தலைவி சுதா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.