காங்கயம்
செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 76வது குடியரசு தின விழா
திருப்பூர் மாவட்டம், காங்கயம் பழைய கோட்டை சாலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு காங்கயம் பகுதியில் இருந்து சுமார் 300 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் நேற்று குடியரசு தின விழாவை முன்னிட்டு காலை 10 மணி அளவில் பள்ளி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்விற்கு நகராட்சி வார்டு கவுன்சிலர் கே.டி. அருண்குமார் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரபாவதி, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.