திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகாமாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பங்குனி பெருந் திருவிழா நடைபெறுவது வழக்கம், அதனை ஒட்டி இந்த வருடம் பங்குனி பெருந்திருவிழா நடத்துவது குறித்து தேதி குறித்தல் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார், ஆலய ஆய்வர்/ தக்கார் க. மும்மூர்த்தி முன்னிலை வகித்தார். ஜெகன் சிவாச்சாரியார் பூஜைகள் செய்து வருகின்ற மார்ச் மாதம் ஏழாம் தேதி (மாசி மாதம் 23ஆம் தேதி) வெள்ளிக்கிழமை பூச்செரிதல் விழாவுடன் விழா தொடங்குகிறது, மார்ச் 9ஆம் தேதி (மாசி மாதம் 25ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ அம்பாளுக்கு முதல் காப்பு கட்டவும், மார்ச் 16ஆம் தேதி (பங்குனி மாதம் இரண்டாம் தேதி) ஞாயிற்றுக்கிழமை அம்பாளுக்கு இரண்டாம் காப்பு கட்டுதல், மார்ச் மாதம் 23ஆம் தேதி (பங்குனி மாதம் ஒன்பதாம் தேதியில்) ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ அம்பாளுக்கு பங்குனி பெருந்திருவிழா நடத்துவது, மார்ச் மாதம் 30 ஆம் தேதி (பங்குனி மாதம் 16ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ அம்பாளுக்கு புஷ்ப பல்லக்கு விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா. சிவனேசன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன், வலங்கைமான் திமுகவை தலைவர் சோம. மாணிக்கவாசகம், வலங்கைமான் நகர அதிமுக செயலாளர் சா. குணசேகரன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாஸ்டர் எஸ்.ஜெயபால், அதிமுக மாவட்ட பிரதிநிதி எஸ். மூர்த்தி, ஸ்ரீ பாடைகட்டி மகா மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்க தலைவர் எம்.எம். சண்முக வேல், செயலாளர் பி. சாமிநாதன், பொருளாளர் வி.எஸ். குமார், துணைத் தலைவர்கள் என். மாரிமுத்து, ப. பெத்த பெருமாள், கோ. சண்முகசுந்தரம் யாதவ், துணை செயலாளர்கள் க. குமரன் எம்.சத்யா (எ) கலியபெருமாள், வி. ஏ. வி. சூரியமூர்த்தி, சங்க விளம்பரம் மற்றும் ஊடகப்பிரிவு செயலாளர் க. அப்பு (எ) ரத்தீஷ் பாபு, வரதராஜன் பேட்டை தெருவாசிகள் நலச்சங்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், இளைஞர் அணியினர், மகளிர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆலய பங்குனி பெரும் திருவிழா தேதி குறிக்கும் விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி, ஆலய அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.