கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்க்குட்பட்ட மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் உள்ள ஈட்டியார் எஸ்டேட் மக்கள் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு நுழைந்த ஒற்றை காட்டுயானை அப்பகுதியிலுள்ள ரேஷன் கடையை உடைத்துள்ளது.
அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த பெரியசாமி என்பவரின் மனைவி அன்னலட்சுமி வயது 67 என்ற மூதாட்டியை எதிர்பாராத விதமாக காட்டுயானை இழுத்து கீழே தள்ளி காலால் தாக்கியுள்ளது இச்சம்பவம் அறிந்த பொதுமக்கள் சத்தம் போட்டு காட்டுயானையை அப்பகுதியில் இருந்து விரட்டியுள்ளனர்
அதைத்தொடர்ந்து யானை தாக்கி படுகாயமடைந்த மூதாட்டியை 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது