கோவை கவுண்டம்பாளையம் ஐக்கிய கிறிஸ்தவ கல்லறை தோட்ட கமிட்டி சார்பாக கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்ட மனுவில்,கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கல்லறை தோட்டத்திற்கு செல்ல பொது வழி சாலை ஒதுக்குதல் தொடர்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது…
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது..
இதில் கோவை கவுண்டம்பாளையம் ஐக்கிய கிறிஸ்தவ கல்லறை தோட்ட கமிட்டி சார்பாக ஆயர் கென்னடி தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
மனுவில் கடந்த இருபது வருடங்களாக பயன்படுத்தி வரும் கல்லறைத் தோடத்திற்கும், அருகில் உள்ள கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கும், இந்துக்கள் மயானத்திற்கும் இடையே உள்ள சுமார் 20 அடி அகல கிழக்கு – மேற்கு பாதையினை பல்வேறு பகுதிகளை சார்ந்த 8 கிருஸ்துவ பிரிவுகளை சார்ந்த கிருஸ்துவ குடும்பத்தினர் வழிபாடு மற்றும் இறந்தோர் நல்லடக்கத்தின் போதும், கல்லறை தோட்டத்திற்கு அடுத்து உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தினசரி தேவைகளுக்காகவும், மற்றும் அசோக் நகர், முல்லை நகர், சுப்பிரமணியம் பாளையம் பகுதி வாழ் மக்கள் தொழில் நிமித்தமாகவும் மற்றும் தினசரி தேவைகளுக்காகவும் பயன்படுத்தி வருகின்றோம்.
தற்பொழுது நாங்கள் பயன்படுத்தி வருகின்ற மாநாகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கம்பி வேலி அமைத்து பூங்கா அமைக்க உள்ளதாக அறிந்தோம். அது சமயம் மேலே குறிப்பிட்டுள்ள 20- அடி அகல கிழமேல் வழித்தடத்தை பொது வழித்தடமாக பயன்படுமாறு அனுமதித்தால் எங்களுக்கும் பொது மக்களுக்கும் பேருதவியாக இருக்கும். இந்த வழித்தடத்திற்காக ஏதேனும் தொகையினை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டியிருந்தால், அந்த கட்டணத்தினை செலுத்தவும் தயாராக உள்ளோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்வதாக மனுவில் கூறியுள்ளனர்..