அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பரிசோதனை பயிற்சி.
அலங்காநல்லூர்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி IAS. மற்றும் மதுரை மாவட்ட ஜல் ஜீவன் மிஷன் திட்ட இயக்குனர் ஆகியோர் ஆலோசனையின் படி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நிர்வாக பொறியாளர் செந்தில்குமரன் தலைமையில் கிராம ஊராட்சிகளில் வழங்கக்கூடியகுடிநீர்சுகாதாரமாகவும் தூய்மையாகவும் கிடைப்பதற்கு தேவையானவழி முறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து மாதம் தோறும் குடிநீரில் நச்சுத்தன்மை அகற்றும் தொற்றுநோய் தடுப்பு மருந்துகள் அரசு அனுமதித்துள்ள விகிதாச்சார அடிப்படையில் அதற்காக வழங்கப்பட்ட மருத்துவ பொருட்களை கலப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து தடையற்ற குடிநீர் சுகாதார மான முறையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் படி செயல்படுத்தப்படுகிறது.நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த பயிற்சியில் கலந்து கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பாளர்கள் மற்றும் ஆபரேட்டர் ஆகியோருக்கு பயிற்சி கையேடு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் நிர்வாகஉதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி பொறியாளர் மற்றும் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர் வள்ளி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்மன்னன், ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அனைத்து அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.