அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பெரியஆற்றங்கரை பகுதியில் அமைந்துள்ள குறிஞ்சி வட்டார களஞ்சியம் பயிற்சி நிறுவனத்தில் தையல் பயிற்சி முகாம் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.இ. தொண்டு நிறுவனம் மூலம் பெண்களுக்கு ஒரு மாத பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் கர்ணன், குறிஞ்சி வட்டார களஞ்சியத்தின் தலைவி ஜெயலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் வள்ளி, பெண்களுக்கான தையல் பயிற்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர் தையல் கம்பெனியின் அனுபவங்களை ஆனந்தன் எடுத்துரைத்தார். தொடர்ந்து பெண்களுக்கு தையல் சம்பந்தமான பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இப்ப பயிற்சியின் பயிற்றுனர் நிரோசா உட்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்